×

முஸ்லிம்களுக்கு பாஜ ஆட்சியில் சலுகை: பிரதமர் மோடி பிரசாரம்

சீதாப்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று எட்டாவா, சீதாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: பிரதம மந்திரி வீட்டுத்திட்டத்தின் கீழ், தேவைப்படும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டதை முஸ்லிம் சகோதர சகோதரிகள் பார்க்கிறார்கள். இதுமட்டுமின்றி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு என அரசின் ஒவ்வொரு நலத்திட்டமும் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அவற்றை எந்த பாகுபாடும் இல்லாமல் முஸ்லிம்களும் பெறுகிறார்கள். இதன் மூலம், காங்கிரசும், இந்தியா கூட்டணியும் தங்களை பகடைக்காயாக பயன்படுத்தியதை முஸ்லிம் சமூகம் உணர்ந்துள்ளது. அதனால் வாக்கு வங்கி அரசியல் செய்பவர்களிடம் இருந்து விலகி நிற்கின்றனர். காங்கிரசும், சமாஜ்வாடியும் நமது ஜனநாயகம், அரசியலமைப்பு பற்றி பொய்களை பரப்ப இயன்ற அளவுக்கு முயற்சி செய்கிறார்கள்.

2047ல் உங்கள் மகனும் மகளும் பிரதமராகவோ முதல்வராகவோ ஆக வேண்டும் என நான் விரும்புகிறேன். எங்களுக்கு (உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சேர்த்து குறிப்பிட்டார்) என்ன குழந்தையா குட்டியா? உங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் உழைக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். இதைத் தொடர்ந்து அயோத்தி சென்ற ராமர் கோயிலில் வழிபட்டார். குழந்தை ராமரை பிரான பிரதிஷ்டை செய்து வைத்த பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அயோத்தியில் பிரமாண்ட ரோடு ஷோவிலும் அவர் பங்கேற்றார்.

* வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்பு மனு தாக்கல்
பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக, உபி மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வரும் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக பாஜ நகர தலைவர் வித்யாசாகர் ராய் நேற்று தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலின் கடைசி மற்றும் 7வது சுற்று தேர்தலில் ஜூன் 1ம் தேதி வாராணாசியில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

The post முஸ்லிம்களுக்கு பாஜ ஆட்சியில் சலுகை: பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Muslims ,PM Modi ,Sitapur ,Modi ,Uttar Pradesh ,Ettawa ,Ujjwala ,BJP ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகளிடம்...